’15 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு’ – வானிலை ஆய்வு மையம்

’15 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு’ – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மிக கனமழைக்கு பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிததுள்ளது.

’15 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு’ – வானிலை ஆய்வு மையம்

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

’15 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு’ – வானிலை ஆய்வு மையம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, கரூர், அரியலூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதிகபட்சமாக பெருங்களூர், வல்லத்தில் தலா 13 செ.மீ ,கீழ்பெண்ணாத்தூர் 11 செ.மீ, தஞ்சையில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், சமயபுரம், லால்குடியில் தலா 8 செ.மீ, கடலூர், இலுப்பூரில் தலா 7 செ.மீ மழை பதிவாகியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.