இந்த 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

 

இந்த 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கொரோனாவால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு அவ்வப்போது மழை பெய்வது நிம்மதியை அளிக்கிறது. இருப்பினும் மழையால் கொரோனா பரவி விடுமோ என்ற அச்சமும் பரவலாக இருக்கிறது. நேற்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் பேரில், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. இந்த நிலையில், தமிழகத்தில் 48 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்பு தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், கோவை, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தமிழகத்தில் அதிகபட்சமாக 20 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கீரனூர், அரக்கோணம், டேனிஷ்பேட்டையில் தலா 13 செ.மீ மழையும் செய்யூர், ஸ்ரீபெரும்புதூர், விரிஞ்சிபுரம் பகுதியில் 12 செ.மீ மழையும் மீனம்பாக்கம், ஆலந்தூர், புதுக்கோட்டையில் தலா 11 செ.மீ மழைப் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், தென்மேற்கு பருவமழை இயல்பை விட 39% அதிகமாக பதிவாகி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.