10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

 

10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று தமிழகத்தின் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் படி பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் லேசான சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, நீலகிரி, நாமக்கல் மற்றும் சேலத்தில் மிக கனமழைக்கும் கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதே போல வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சை, திருவாரூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நாகை, கடலூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அரபிக்கடலில் லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு 7 ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கசெல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.