‘புரெவி புயல்’ இந்த மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

‘புரெவி புயல்’ இந்த மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘புரெவி புயல்’ இந்த மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் நிலைக் கொண்டிருக்கும் புரெவி புயல் பாம்பனுக்கு மிக அருகில் மையம் கொண்டிருப்பதாகவும் 80 முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசி புயல் கரையைக் கடக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பதனம்திட்டா, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

‘புரெவி புயல்’ இந்த மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வட தமிழகம், காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மாலத்தீவு கடல் பகுதிகளுக்கு 5ம் தேதி வரையிலும், மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு 4ம் தேதி வரையிலும் மீனவர்கள் வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்த புயல் ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.