தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு?.. முடிவடைந்தது ஆலோசனை கூட்டம்!

 

தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு?.. முடிவடைந்தது ஆலோசனை கூட்டம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு கொரோனா பாதிப்பு 400 முதல் 600 வரையிலேயே அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,275 ஆக அதிகரித்துள்ளது. இந்த கொடிய வகை நோய்த்தொற்றில் இருந்து மக்களை காக்க 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு, தேனி மற்றும் மதுரையில் கடுமையான ஊரடங்கு அமலில் இருக்கிறது.

 

தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு?.. முடிவடைந்தது ஆலோசனை கூட்டம்!இந்த நிலையில் தமிழகத்தில் பாதிப்பு பன்மடங்கு அதிகமாகி வருவதால், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக இன்று காலை தலைமை செயலகத்தில் மருத்துவக்குழு நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அந்த கூட்டம் தற்போது முடிவடைந்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் மருத்துவக்குழுவினர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர். மேலும், சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.