Home தமிழகம் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு

7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக,சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய வட தமிழக மாவட்டங்கள் , புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் ,நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் அக்டோபர் 27,28 தேதிகளில், தென்தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். 29ஆம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மாவட்ட செய்திகள்

Most Popular

ராஜஸ்தானில் கோவிட்-19 விதிமுறைகளை மீறிய 10 லட்சம் பேரிடம் அபராதம் வசூலித்த போலீசார்

ராஜஸ்தானில் கடந்த 8 மாதங்களில், மாஸ்க் அணிவது உள்ளிட்ட கோவிட்-19 விதிமுறைகளை மீறிய 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களிடம் அபராதமாக மொத்தம் ரூ.14 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில...

70 வயதிலும் ஓய்வு காலத்தை விவசாயத்தில் செலவிடும் கேரள தம்பதியினர்.. வாரம் ரூ.45 ஆயிரம் வரை வருமானம்

கேரளாவை சேர்ந்த அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற தம்பதியினர் தங்களது ஓய்வு காலத்தை விவசாயத்தில் செலவிடுகின்றனர். இதன் வாயிலாக வாரத்துக்கு ரூ.45 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுகின்றனர்.

கட்டாய மத மாற்ற தடை சட்டத்தை தொடர்ந்து… மத கலப்பு திருமண ஊக்கத்தொகை திட்டம் வாபஸ்.. யோகி அரசு யோசனை

உத்தர பிரதேசத்தில் கட்டாய மத மாற்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளநிலையில், மத கலப்பு திருமண ஊக்கத்தொகை திட்டத்தை திரும்ப பெற அம்மாநில அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2021ம் ஆண்டில் 5ஜி தொலைத்தொடர்பு சேவை… 6 வருஷத்துல சந்தாதாரர்களின் எண்ணிக்கை 35 கோடியை தாண்டும்…

நம் நாட்டில் 2021ம் ஆண்டில் 5ஜி தொலைத்தொடர்பு சேவை அமலுக்கு வரும் என்று தொலைத்தொடர்பு நிறுவனமான எரிக்சன் கணித்துள்ளது. நம் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக...
Do NOT follow this link or you will be banned from the site!