இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும்!

 

இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும்!

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே இடத்தில் வளிமண்டல சுழற்சியாக நிலை கொண்டுள்ளது. இதன்காரணமாக இன்று காலை முதல் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்தது.

இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும்!

மேலும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அரியலூர், ஈரோடு, பெரம்பலூர், தேனி, மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.