மகாராஷ்டிராவில் இருந்து வரத்து குறைவு: வெங்காய விலை உயரும் அச்சம்!

 

மகாராஷ்டிராவில் இருந்து வரத்து குறைவு: வெங்காய விலை உயரும் அச்சம்!

தமிழகத்துக்கு வெங்காய வரத்து குறைந்து இருப்பதால் விலை உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்னர்.

கடந்த ஆண்டு வெங்காயம் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் இடங்களான மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழையின் காரணமாக வெங்காய வரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் பெய்த கனமழையாலும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு போகச் சாகுபடி வெங்காயங்களும் பாதிக்கப்பட்டது. இதனால், பெரிய மார்கெட்டுகளான ஒட்டன்சத்திரம் மற்றும் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ளூர் வெங்காய வரத்தும் குறைந்து ஒரு கிலோ வெங்காயம் சுமார் ரூ.250க்கு மேல் விற்கப்பட்டு வந்தது. இந்த விலை உயர்வு ஏழை எளிய மக்களை அதிருப்தி அடையச்செய்தது.

மகாராஷ்டிராவில் இருந்து வரத்து குறைவு: வெங்காய விலை உயரும் அச்சம்!

இந்த நிலையில் இந்த ஆண்டும் வரத்து குறைவாக இருப்பதால் வெங்காய விலை உயரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மழை காரணமாக மகாராஷ்டிராவில் இருந்து திருச்சி வெங்காய மண்டிக்கு 350 டன் வெங்காயம் மட்டுமே வருகிறதாம். வழக்கமாக 550 டன் வந்து கொண்டிருந்ததால் தற்போது ஒரு கிலோ வெங்காய விலை ரூ.30 ஆக இருக்கிறது. வரத்து குறைவால் இந்த விலையில் மாற்றம் ஏற்படும் என்றும் ஒரு கிலோ வெங்காயம் ரூ.50க்கு விற்க வாய்ப்பு இருப்பதாகவும் திருச்சி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.