‘மீண்டும் வெளுத்து வாங்கப் போகும் மழை’: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

‘மீண்டும் வெளுத்து வாங்கப் போகும் மழை’: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் டிச.16 முதல் 18 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

‘மீண்டும் வெளுத்து வாங்கப் போகும் மழை’: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், டிச.16 முதல் 18 வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் கனமழையும் சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘மீண்டும் வெளுத்து வாங்கப் போகும் மழை’: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் அதிபட்சமாக பேச்சி பாறையில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடலூர், நாகை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை அடுத்தடுத்து உலுக்கி எடுத்து விட்டுச் சென்ற புயல்களின் தாக்கம் சற்றே தணிந்திருக்கும் நிலையில், தற்போது மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.