அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகிறது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

 

அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகிறது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

கடந்த 21 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக உருவாகி, நிவர் புயல் உருவானது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வந்தது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து, மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நேற்று முன் தினம் நள்ளிரவு 2 மணிக்கு புதுச்சேரி- மரக்காணம் இடையே நிவர் புயல் கரையைக் கடந்தது.

அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகிறது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

இந்நிலையில் வங்கக் கடலில் அடுத்த 36 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வலுப்பெற்று டிசம்பர் 2 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவை கடற்பகுதிகளை நெருங்கும். இதனால் டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.