• April
    04
    Saturday

Main Area

Main



மேலடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு !

 மழை
மழை

சென்னை: மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய  வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

rain

ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணத்தாலும், வெப்பச்சலனத்தாலும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, நாகை, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

rain

சென்னையைப் பொறுத்தவரை   வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்  இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும்  அறிவுறுத்தியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.