தமிழகத்தில் இந்த 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 

தமிழகத்தில் இந்த 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், சிவகங்கை,மதுரை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.இதேபோல் திருவள்ளூர் ,ராணிப்பேட்டை, புதுக்கோட்டை ,ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

மன்னார் வளைகுடா, மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .