‘தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’ – வானிலை ஆய்வு மையம்

 

‘தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’ – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில், அருவிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால், கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மழை பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் அரசு தயார் நிலையில் வைத்திருக்கிறது.

‘தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’ – வானிலை ஆய்வு மையம்

இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 21 செ.மீ, பரமக்குடியில் 13 செ.மீ, பாபநாசத்தில் 12 செ.மீ மழை பதிவாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.