தமிழகத்தில் நாளை வரை மழைக்கு வாய்ப்பு!

 

தமிழகத்தில் நாளை வரை  மழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் நாளை வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை வரை  மழைக்கு வாய்ப்பு!

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் நாளை வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் முதல் 20-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழகம் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும். தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் , மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை வரை  மழைக்கு வாய்ப்பு!

நேற்றைய நிலவரப்படி நெல்லை, ராமநாதபுரம் , தூத்துக்குடி மாவட்டங்களில் 3 மணிநேரத்திற்கு தொடர்ந்து கனமழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதேபோல் கடலூர் ,நாகை ,தஞ்சை ,மதுரை, தேனி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவித்திருந்தது. இருப்பினும் பருவ மழை தற்போது முடிவுக்கு வந்துள்ளதால் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.