தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் வங்கக் கடல் பகுதிக்கு 5 நாட்களுக்கு மீனவர் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

கடந்த 12ஆம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் 16ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்க கடல், மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.