ராமநாதபுரம், தூத்துக்குடியில் மழைக்கு வாய்ப்பு: நாளை இரவு சென்னையில் கனமழை பெய்யும்!

ராமநாதபுரம், தூத்துக்குடியில் மழைக்கு வாய்ப்பு: நாளை இரவு சென்னையில் கனமழை பெய்யும்!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடியில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.

ராமநாதபுரம், தூத்துக்குடியில் மழைக்கு வாய்ப்பு: நாளை இரவு சென்னையில் கனமழை பெய்யும்!

ஏனைய உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். அடுத்த 48 மணி நேரத்திற்கு கீழ்திசை காற்றின் சுழற்சி காரணமாக நாளை இரவு ,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ராமநாதபுரம், தூத்துக்குடியில் மழைக்கு வாய்ப்பு: நாளை இரவு சென்னையில் கனமழை பெய்யும்!

நாளை மறுநாள் சென்னை ,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ,புதுவை, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.