‘4 மாவட்டங்களில்’ அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

 

‘4 மாவட்டங்களில்’ அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 3 மணி நேரத்தில், 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து 2 நாட்களுக்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. ஒரு நாள் மழைக்கே தாங்காத சென்னை, தொடர் கனமழையால் மீண்டும் வெள்ளக் காடாக மாறியது. ஏரிகள் அனைத்தும் நிரம்பி உபரி நீர் வெளியே திறக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் சென்னையில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

‘4 மாவட்டங்களில்’ அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக ஜனவரி 10 வரை மழை நீடிக்கும் என்று தெரிவித்திருந்த வானிலை ஆய்வு மையம், அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, கோவை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ,மயிலாடுதுறை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.