தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்

 

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்

நீலகிரியில் கனமழையும், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, திருவள்ளுர், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம்.
ஆகஸ்ட் 12 முதல் 15ம் தேதி வரை மகாராஷ்டிரா, கோவா, தெற்கு குஜராத் கடலோரப் பகுதிகளில் 45-55 கி.மீ வேகத்துக்கு காற்று வீசக்கூடும்.

 

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்இந்த காலக்கட்டத்தில் மத்திய அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை இரவு வரை கடல் 3.5 முதல் 3.6 மீட்டர் வரை அலைகள் எழக்கூடும். மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.