தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு !

 

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு !

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு !

தமிழகத்தில் 16 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது.

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு !

சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ,திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 10 செமீ., தேவகோட்டையில் 9 செமீ., மழை பதிவாகியுள்ளது.