2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு!

 

2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 48 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் தூத்துக்குடி, புதுக்கோட்டை என டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்ந்ததால் நெற்பயிர்கள் சேதமாகின. அதே சமயம் வடகிழக்கு பருவமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததால், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்தது.

2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு!

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை நாளையுடன் நிறைவு பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. 2 நாட்களுக்கு தமிழகம் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் . சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் . காலையில் லேசான பனிமூட்டம் இருக்கும். 20, 21 ஆகிய தேதிகளில் தென்தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.