தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு: 14ஆம் தேதி உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு: 14ஆம் தேதி உருவாகவுள்ள  புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு: 14ஆம் தேதி உருவாகவுள்ள  புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கே நிலைக்கொண்டுள்ள நிலையில் நாளை இரவு வடக்கு ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு: 14ஆம் தேதி உருவாகவுள்ள  புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

இந்நிலையில் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அத்துடன் வங்கக்கடல் அந்தமான் பகுதியில் வரும் 14ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.