கோவை, நீலகிரியில் கனமழை ; சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கோவை, நீலகிரியில் கனமழை ; சென்னை உள்பட 7 மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனியில் மிக கனமழை பெய்த நிலையில்  காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தருமபுரி மாவட்டங்களிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சில இடங்களில் மிதமான மழை பெய்தது.

கோவை, நீலகிரியில் கனமழை ; சென்னை உள்பட 7 மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு!

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கோவை, நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், சென்னை, புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

கோவை, நீலகிரியில் கனமழை ; சென்னை உள்பட 7 மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு!

மன்னார் வளைகுடா பகுதியில் 50 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.