தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, கோவை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ,மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை உள்ளிட்ட தமிகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. இதனால் ஏரிகள் நிரப்பிய நிலையில் அதிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. அதே சமயம் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு அதிகம் பெய்துள்ள நிலையில் ஜனவரி 10 வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது குறிப்பிடத்தக்கது.