“இன்னைக்கு இந்த 6 மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்க போகுது” – வானிலை மையம் எச்சரிக்கை!

“இன்னைக்கு இந்த 6 மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்க போகுது” – வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் வெப்ப சலனத்தின் காரணமாகவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாகவும் இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை ,காஞ்சிபுரம், திருவண்ணாமலை ,செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“இன்னைக்கு இந்த 6 மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்க போகுது” – வானிலை மையம் எச்சரிக்கை!

அதேபோல பெரும்பாலான மாவட்டங்களில் இன்னும் 5 நாட்களுக்கு மிதமான மழை ஆங்காங்கே பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

“இன்னைக்கு இந்த 6 மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்க போகுது” – வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னையில் மாநகரின் முக்கிய பகுதிகளிலும் லேசான மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். இதனால் இந்த தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.