‘இந்த 5 மாவட்டங்களில்’ அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!

 

‘இந்த 5 மாவட்டங்களில்’ அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘இந்த 5 மாவட்டங்களில்’ அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் காணும் பொங்கல் வரை பருவமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்ததன் படி, தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. திருவாரூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழையால் லட்சக் கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்திருப்பதால் விவசாயிகள் வேதனையில் இருக்கின்றனர். நாளை தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட விருக்கும் சூழலில், கனமழை தொடருவது மக்களை பெரும் இன்னலுக்கு உள்ளாக்கியிருக்கிறது.