லிஃப்ட் கேட்பது போல நடித்து செயின் பறிப்பு : உஷார் மக்களே!

 

லிஃப்ட் கேட்பது போல நடித்து செயின் பறிப்பு : உஷார் மக்களே!

திருப்பூர் அருகே லிஃப்ட் கேட்பது போல நடித்து, பைக்கில் சென்றவரிடம் செயின் மற்றும் செல்போன் பறித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் அடுத்த பெருமாநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் மதியழகன். இவர் நகை அடகு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வரும் நிலையில், உடல்நிலை பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறாராம். இந்த நிலையில், மருத்துவரை அணுகுவதற்காக மதியழகன் குன்னத்தூர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரிடம் ஒரு நபர் லிஃப்ட் கேட்டிருக்கிறார்.

லிஃப்ட் கேட்பது போல நடித்து செயின் பறிப்பு : உஷார் மக்களே!

மதியழகன் பைக்கை நிறுத்திய போது அவரை சுற்றி வளைத்த 3 பேர் கொண்ட கும்பல், மிரட்டி அவர் அணிந்திருந்த செயின் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினர். அதிர்ச்சி அடைந்த மதியழகன், பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் தன்னிடம் செயின் மற்றும் செல்போன் பறிக்கப்பட்டது தொடர்பாக புகாரளித்தார்.

அந்த புகாரின் பேரில் மதியழகனிடம் கைவரிசையைக் காட்டிய கும்பலுக்கு வலைவிரித்த போலீசார், குன்னத்தூர் அருகே தவசி, வாசிம்ராஜா மற்றும் இம்ரான் கான் ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதியழகனின் செல்போன் மற்றும் செயின் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 64 ஆயிரம் மதிப்பிலான செயின் மற்றும் செல்போனை போலீசார் மதியழகனிடம் ஒப்படைத்தனர்.