பெண் காவல் ஆய்வாளருக்கே இந்த நிலைமையா… போலீசார் தீவிர வேட்டை!

 

பெண் காவல் ஆய்வாளருக்கே இந்த நிலைமையா… போலீசார் தீவிர வேட்டை!

ஜோலார்பேட்டை அருகே பெண் காவல் ஆய்வாளரிடம் அருகே பெண் காவல் ஆய்வாளரிடம் இருந்து 7 சவரன் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாசரிபட்டம் பகுதியில் வசித்து வருபவர் புனிதா(44). இவர் திருப்பத்தூர் மாவட்ட கியூ பிரான்ச் பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளியே வந்து இருக்கும் பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தங்கியிருப்பதால் அங்கு பாதுகாப்பு பணியில் புனிதா ஈடுபட்டு வருகிறார்.

பெண் காவல் ஆய்வாளருக்கே இந்த நிலைமையா… போலீசார் தீவிர வேட்டை!

வழக்கம் போல நேற்று இரவு பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார் புனிதா. அப்போது அவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் வண்டியை மோதுவது போல பாசாங்கு காட்டியுள்ளனர். இதனால் புனிதா நிலை தடுமாறிய போது அவரது கழுத்தில் இருந்த 7 சவரன் தங்க சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலைய ஆய்வாளரிடம் புனிதா புகார் அளித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பேசிய போலீசார், செயின் சங்கிலி பறிப்பு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் காட்சிகள் சில பதிவாகியுள்ளன. 4 பேர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.