இலங்கை தொழிலாளர், காங்கிரஸ் தலைவரும், அந்நாட்டு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.
இலங்கையின் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் சற்று முன்னர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. கொழும்பிலுள்ள தனது வீட்டில் தவறி விழுந்த இவர், மயக்கமடைந்தார். உடனடியாக அவரது வீட்டிலுள்ளவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அதற்குள் அவரது உயிர் பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 55 வயதான ஆறுமுகன் தொண்டமான் ஆறுமுகன் தொண்டமான் காங்கிரசின் முன்னாள் தலைவராக இருந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் ஆவார்.
ஆறுமுகன் தொண்டமான், 1990ஆம் ஆண்டு முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியிலுள்ளார். 1993ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளராக பணியாற்றிய அவர், 1994ஆம் ஆண்டு கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார். 1994ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிகபடியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து அமைச்சரானார். தற்போதைய அரசாங்கத்திலும் அமைச்சராக நீடிக்கிறார்.