கர்ப்பிணி யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம்… மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி!

 

கர்ப்பிணி யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம்… மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் வனப்பகுதியில் கருவுற்ற யானை ஒன்று பசியுடன் சுற்றி திரிந்துள்ளது. இதனால் அந்த யானை பசி தாளாமல் ஊருக்குள் வந்துள்ளது. அங்கு மனிதர்கள் கொடுத்த உணவை சாப்பிட்டுள்ளது. அப்போது சிலர் அன்னாச்சி பழத்தில் வெடிமருந்து வைத்து யானைக்கு சாப்பிட கொடுத்துள்ளனர். யானை அதை சாப்பிட முயன்ற போது அந்த வெடிமருந்து வாயிலேயே வெடித்துள்ளது.

கர்ப்பிணி யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம்… மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி!

கர்ப்பிணி யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம்… மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி!

இதனால் பலத்த காயமடைந்த யானை வலி தாங்க முடியாமல் அங்கிருந்து மீண்டும் காட்டுக்குள் ஓடியுள்ளது. இருப்பினும் வலி தாங்க முடியாமல் ஆற்றில் இறங்கி நின்றுள்ளது. இதை அறிந்த வனத்துறையினர் இரண்டு யானைகளின் உதவியுடன் அதனை மீட்க முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் யானை பரிதாபமாக பலியானது.

இந்த தகவல் இணையத்தில் கேரள வனத்துறை அதிகாரி ஒருவரால் பதியப்பட்ட நிலையில் பலரும் யானையை கொன்றவர்களுக்கு உரிய தண்டனை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். மனிதர்கள் ரூபத்தில் வாழும் இதுபோன்ற மிருகங்கள் தான் உண்மையில் காட்டில் இருக்க வேண்டியவர்கள் என்று பலரும் ஆதங்கத்துடன் கூறி வருகிறார்கள்.

பா.ஜ.க. தலைவரும், விலங்கு நல ஆர்வலருமான மேனகா காந்தி டிவிட்டரில், மலப்புரம் கடுமையான குற்றச் செயல்களுக்காக குறிப்பாக விலங்குகள் தொடர்பாக அறியப்படுகிறது. ஒரு வேட்டைக்காரர் அல்லத கொலையாளி மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அவர்கள் அதை செய்கிறார்கள். நான் அழைப்பு/மின்னஞ்சல் மட்டுமே பரிந்துரைக்க முடியும் மற்றும் நடவடிக்கை கேட்க முடியும் என பதிவு செய்து இருந்தார்.

இதையடுத்து யானை பலியானது தொடர்பாக வனத்துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி அளித்துள்ளார்.

https://twitter.com/PrakashJavdekar/status/1268381204782465027

இந்நிலையில் இதுகுறித்து  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் , “கேராளாவில் யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம். மலப்புரத்தில் அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து யானையை கொன்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” தெரிவித்துள்ளார்.