”அரசு அலுவலகங்களில் பிஎஸ்என்எல் சேவை கட்டாயம்” – மத்திய அரசு அதிரடி உத்தரவு

”அரசு அலுவலகங்களில் பிஎஸ்என்எல் சேவை கட்டாயம்” – மத்திய அரசு அதிரடி உத்தரவு

நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவையை பயன்படுத்துவது கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

”அரசு அலுவலகங்களில் பிஎஸ்என்எல் சேவை கட்டாயம்” – மத்திய அரசு அதிரடி உத்தரவு

இது தொடர்பாக , தொலைத்தொடர்பு துறை சார்பில் அனைத்து அமைச்சகங்களுக்கும் உத்தரவு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அமைச்சகங்கள், மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளன.

அரசு அலுவலகங்களில், தரைவழி இணைப்பு தொலைபேசி, இணையதள இணைப்பு- பிராட்பேண்ட் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பிஎஸ்என்எல் மற்றும் என்டிஎன்எல் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் சேவையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

”அரசு அலுவலகங்களில் பிஎஸ்என்எல் சேவை கட்டாயம்” – மத்திய அரசு அதிரடி உத்தரவு

பெரும் நஷ்டத்தில் சிக்கி தவித்து வரும், பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனத்திற்கு மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. கடந்த 2019-20ம் ஆண்டில், பிஎஸ்என்எல் நிறுவனம் 15,500 கோடி நஷ்டத்தை சந்தித்த நிலையில், அந்நிறுவனத்தின் தரைவழி இணைப்பு எண்ணிக்கை கடந்த ஜூலையில் 80 லட்சமாக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2008ம் ஆண்டு நவம்பரில் 2.9 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்