”அமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு நோட்டீஸ்”

 

”அமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு நோட்டீஸ்”

ஆன்லைனில் பொருட்களுடன் முக்கிய விபரங்கள் வெளியிடாதது தொடர்பாக அமேசான் பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஆன்லைனில் விற்பனையாகும் பொருட்கள் குறித்த விபரங்கள், அது எந்த நாட்டில் உருவாக்கப்பட்டது உள்ளிட்ட அடிப்படையான விபரங்களை அவசியம் வெளியிடப்பட வேண்டும். ஆனால் பல ஆன்லைன் நிறுவனங்கள் இதை கடைப்பிடிக்க வில்லை என தெரிகிறது. இதையடுத்து விற்பனை செய்யப்படும் பொருட்கள் குறித்த அவசியமான விபரங்களை வெளியிடாத து குறித்து விளக்கம் கேட்டு அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

”அமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு நோட்டீஸ்”

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நுகர்வோர் விவகாரங்கள் துறையால் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதன் படி நோட்டீஸ் பெறப்பட்ட நிறுவனங்களுக்கு 15 நாட்களுக்குள் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும் என அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என தெரிகிறது.

”அமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு நோட்டீஸ்”

பிக் பில்லியன் டேஸ் என்ற பெயரில் பிளிப்கார்ட் நிறுவனமும், தி கிரேட் இந்தியன் பெஸ்டிவல் என்ற பெயரில் அமேசான் நிறுவனமும், பண்டிகை கால விற்பனையை தொடங்கி கலக்கி வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்