சென்னையில் தயாரான ஆக்சிஜன் ஆந்திராவுக்கு சப்ளை- மத்திய அரசால் கடுப்பான விஜயபாஸ்கர்!

 

சென்னையில் தயாரான ஆக்சிஜன் ஆந்திராவுக்கு சப்ளை-  மத்திய அரசால் கடுப்பான விஜயபாஸ்கர்!

கொரோனா இரண்டாம் அலையால் இந்தியாவே நிலைகுலைந்துள்ளது. முதல் அலையைக் காட்டிலும் தற்போது கொரோனா அதிக வீரியத்துடன் பரவிவருகிறது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மருத்துவக் கட்டமைப்பு ஆட்டம் கண்டுள்ளது. நாட்டின் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழ்நாட்டிலும் பெரிதாக இல்லாவிட்டாலும் ஆங்காங்கே பிரச்சினைகள் இருக்கின்றன. வேலூரில் ஆக்சிஜன் இல்லாமல் 7 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டதை உதாரணமாகச் சொல்லலாம்.

சென்னையில் தயாரான ஆக்சிஜன் ஆந்திராவுக்கு சப்ளை-  மத்திய அரசால் கடுப்பான விஜயபாஸ்கர்!

ஆக்சிஜன் பற்றாக்குறைக்குக் காரணம் இரண்டாம் அலையில் பரவும் தொற்றின் வீரியம் தான் என்கின்றனர் ஆய்வாளார்கள். முதல் அலையில் 41 சதவீதம் பேருக்கு மட்டுமே ஆக்சிஜன் தேவைப்பட்டது. ஆனால் தற்போதோ 54 சதவீதத்துக்கு மேற்பட்டோருக்கு அவசியமாக இருக்கிறது. தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் ஆக்சிஜன் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.

சென்னையில் தயாரான ஆக்சிஜன் ஆந்திராவுக்கு சப்ளை-  மத்திய அரசால் கடுப்பான விஜயபாஸ்கர்!

குறிப்பாக பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் இல்லாமல் செத்து மடியும் கொரோனா நோயாளிகளை எரிக்க இடுகாடு இல்லாமல் நடைபாதையில் எரிக்கின்றனர். இந்த அளவிற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரம் தலைவிரித்தாடுகிறது. இச்சூழலில் சென்னையிலுள்ள நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திராவிற்கும் தெலங்கனாவிற்கும் மத்திய அரசு அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

சென்னையில் தயாரான ஆக்சிஜன் ஆந்திராவுக்கு சப்ளை-  மத்திய அரசால் கடுப்பான விஜயபாஸ்கர்!

இதுதொடர்பாகப் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழ்நாடு அரசிடம் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு 45 ஆயிரம் கிலோ ஆக்சிஜனை அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கனாவிற்கு அனுப்பியிருக்கிறது. நாங்கள் எங்களுடைய அண்டை மாநிலத்தாருக்கு உதவுவோம். 2020ஆம் ஆண்டு கொரோனா பரவலின்போது நாங்கள் உதவியிருக்கிறோம். ஆனால் இப்போது தமிழ்நாடு இருக்கும் சூழ்நிலையும் மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

T.N. still in second stage of pandemic: Vijayabaskar - The Hindu

சுமார் 80 ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தினமும் தமிழ்நாட்டிற்கு 200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆந்திரா(53,889), தெலங்கனாவை (42,859) ஒப்பிடுகையில் தமிழ்நாட்டிலேயே அதிகமானோர் சிகிச்சை பெறுகின்றனர். நாங்கள் நிச்சயமாக இந்த விவகாரத்தை மத்திய அரசிடம் முன்வைத்து தீர்வு காண்போம்” என்றார்.