லஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு

 

லஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு

சென்னையை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் லஷ்மி விலாஸ் வங்கி, இந்தியாவில் 19 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில், 566 வங்கிக் கிளைகளும், 918 ஏடிஎம்களும் வைத்துள்ளது. சிறு குறு நிறுவனங்களுக்கு கடன் அதிகமாக வழங்கி வந்த லஷ்மி விலாஸ் பெரு நிறுவனங்களுக்கும் அதிக கடன் கொடுக்கத் தொடங்கியது. இதனால் பெரும் பிரச்னைகளை லஷ்மி விலாஸ் வங்கி சந்தித்தது. 2017 கால கட்டத்தில் 2.67 சதவிகிதமாக இருந்த லஷ்மி விலாஸ் வங்கியின் செயல்படாத கடன் (NPA), மார்ச் 2020 ஆம் ஆண்டு 25.39 சதவிகிதமாக அதிகரித்தது. லஷ்மி விலாஸ் வங்கியில் பணிபுரியும் உயர் அதிகாரிகள், கடந்த சில ஆண்டுகளில் இந்த வங்கியை விட்டு ஏராளமானோர் வெளியேறியுள்ளனர். நஷ்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் லஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

லஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு

இந்நிலையில் இன்று முதல் டிசம்பர் மாதம் 16 வரையிலான ஒரு மாதத்திற்கு லஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 25 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுக்கமுடியாது என மத்திய நிதி அமைச்சகம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் துறைக்கு கடனுதவி வழங்குவதை லஷ்மி விலாஸ் வங்கி தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்கான செலவு, உயர்கல்வி கட்டணம் செலுத்துதல் மற்றும் திருமண செலவுகள் உள்ளிட்ட செலவுகளுக்கு 25ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க வேண்டுமேனால் ரிசர்வ் வங்கியின் அனுமதியை பெறவேண்டுமென்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.