பாரத்நெட் திட்டத்திற்கு மறு டெண்டர்! – அமைச்சர் உதயகுமார் பேட்டி

 

பாரத்நெட் திட்டத்திற்கு மறு டெண்டர்! – அமைச்சர் உதயகுமார் பேட்டி

பாரத் நெட் திட்டத்திற்கு தமிழக அரசு விடுத்த டெண்டரை மத்திய அரசு ரத்து செய்துள்ள நிலையில், மறு டெண்டர் கோரப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
பாரத் நெட் எனப்படும் கிராமங்களை பைஃபர் கண்ணாடி இழையால் இணைக்கும் திட்டத்திற்கு டெண்டர் வழங்கியதில் ஊழல் நடந்ததாக தி.மு.க சார்பில் கூறப்பட்டது. அதில் ஊழல் நடக்கவில்லை என்று தமிழக அரசு கூறியது. இது தொடர்பாக தி.மு.க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற உத்தரவிட்டது. இதனால், ஊழல் புகார் கூறிய தி.மு.க -வின் மூக்கு உடைபட்டுள்ளது என்று அமைச்சர் உதயகுமார் கூறியிருந்தார்.
ஆனால், தமிழக அரசு விடுத்த டெண்டரை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

பாரத்நெட் திட்டத்திற்கு மறு டெண்டர்! – அமைச்சர் உதயகுமார் பேட்டி
மதுரை திருப்பரங்குன்றம் அருகே பொது மக்களுக்கு கப சுர குடிநீர் தயாரிக்கத் தேவையான மூலிகைப் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உதயகுமாரிடம் இது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர், “ஆரம்ப நிலையிலேயே பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி, பாரத் நெட் திட்டத்திற்கு செயற்கையாக தடை ஏற்படுத்த முயற்சிகள் நடந்தன. தற்சாற்பு இந்தியா திட்டத்திற்கு ஏற்ப நிபந்தனைகள் இடம்பெறும் வகையில் பாரத்நெட் திட்டத்திற்கு மறுடெண்டர் கோருவதற்கு மத்திய அரசு வழிகட்டுதலை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் மறு டெண்டர், இ-டெண்டர் முறையில் வெளிப்படையாக கோரப்படும். எந்தவித குளறுபடியும் இல்லாமல் மக்களிடையே பாரத்நெட் திட்டம் கொண்டுபோய் சேர்க்கப்படும்” என்றார்.