கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை… சற்றுமுன் மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

 

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை… சற்றுமுன் மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை வேகமாகப் பரவிவருகிறது. மீண்டும் லாக்டவுன் போட்டால் பொருளாதாரம் வீழ்ந்துவிடும் என்பதால், தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 45 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த தடுப்பூசி திருவிழா நடத்த பிரதமர் மோடி ஆலோசனை வழங்கினார். அதன்படி நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழா நடைபெற்றுவருகிறது. ஆனால் மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நோயாளிகள் அதிகரிப்பதால் தடுப்பூசி பற்றாக்குறை கடுமையாக உள்ளது.

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை… சற்றுமுன் மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

இச்சூழலில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக வல்லுநர் குழு இன்று ஆலோசனை நடத்தியது. இந்தக் குழு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்காக ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு அனுமதி வழங்க பரிந்துரைத்துள்ளது. அதன்படி தற்போது மத்திய அரசு ரஷ்ய தடுப்பூசிக்கு அனுமதி கொடுத்துள்ளது. இது இந்தியாவில் பயன்படுத்தப்படும் மூன்றாவது தடுப்பூசியாகும். ஏற்கெனவே கோவிஷீல்டு, கோவாக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகள் செயல்பாட்டில் உள்ளன.

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை… சற்றுமுன் மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

அக்டோபர் மாதத்தில் மேலும் ஐந்து புதிய தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை ஐக்கிய அமீரகம், வெனிசுலா, பெலாரஸ் ஆகிய நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 18 முதல் 99 வயதானவர்களுக்குத் தடுப்பூசி சோதனை நடத்தப்பட்டது. இந்தத் தடுப்பூசி சுமார் 92 சதவீதம் வரை பலனளிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசி 10 டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.751) விற்பனை செய்யப்படுகிறது.