கொரோனா தடுப்புப்பணி: ரூ. 2000 கோடி கேட்ட தமிழக அரசுக்கு ரூ. 335 கோடி கொடுத்த மத்திய அரசு!

 

கொரோனா தடுப்புப்பணி: ரூ. 2000 கோடி கேட்ட தமிழக அரசுக்கு ரூ. 335 கோடி கொடுத்த மத்திய அரசு!

மார்ச் 24-ஆம் தேதியிலிருந்து ஜூலை 31-ஆம் தேதி வரை பல கட்டங்களாக நீட்டிக்கப்பட்டுள்ள நான்கு மாத ஊரடங்கின் காரணமாக, அனைத்துத் தரப்பினரின் வாழ்க்கையிலும் புயல் வீசி, ஏராளமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. வேலையிழப்பு, வருமான இழப்பு, இல்லாமை, போதாமை, நோய்த் தொற்று போன்றவற்றால் மக்கள் பலரும் தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலைமை ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய் சிகிச்சைக்குத் தேவையான வெண்டிலேட்டர், முகக் கவசங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு 2000 கோடி ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்க வேண்டும் என 17.6.2020 அன்று பிரதமருடன் காணொலிக் காட்சி மூலம் நடத்திய ஆலோசனையில் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை வைத்திருந்தார்.

கொரோனா தடுப்புப்பணி: ரூ. 2000 கோடி கேட்ட தமிழக அரசுக்கு ரூ. 335 கோடி கொடுத்த மத்திய அரசு!

இந்நிலையில் கொரோனா கிருமித்தொற்றுத் தடுப்புப் பணிகளுக்காக தமிழகம், கேரளா உள்ளிட்ட மொத்தம் 14 மாநிலங்களுக்கும் மத்திய நிதியமைச்சகம் தற்போது நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி 14 மாநிலங்களுக்கு மொத்தம் 6,195.08 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.335.41 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் தமிழக அரசு கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.2000 கோடி மத்திய அரசிடம் கேட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது