நிவர் புயல் பாதிப்பு – மத்திய குழு இன்று மாலை தமிழகம் வருகை!

நிவர் புயல் பாதிப்பு – மத்திய குழு இன்று மாலை தமிழகம் வருகை!

நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று மாலை தமிழகம் வருகிறது.

மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு நாளை தமிழகத்தில் ஆய்வுகளை தொடங்கவுள்ளது. வேளாண்மை, மீன்வளத் துறை, நிதி, நகர்ப்புற வளர்ச்சித்துறைகளின் பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் நிவர் பாதிப்பு விவரங்களை மத்திய குழு பார்வையிட உள்ளது.

நிவர் புயல் பாதிப்பு – மத்திய குழு இன்று மாலை தமிழகம் வருகை!

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

நிவர் புயல் பாதிப்பு – மத்திய குழு இன்று மாலை தமிழகம் வருகை!

தமிழகத்தில் பெருமளவு சேதம் இல்லாவிட்டாலும் 3 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் காயமடைந்தனர். அத்துடன் புதுச்சேரிக்கு அருகில் இப்புயல் கரையை கடந்தாலும் அங்கு கடும் சேதம் ஏற்பட்டது. சுமார் 400 கோடி இழப்பு ஏற்பட்டதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.