கொரோனா தடுப்பு நடவடிக்கை: முதல்வருடன் மத்தியக்குழு ஆலோசனை!

 

கொரோனா தடுப்பு நடவடிக்கை: முதல்வருடன் மத்தியக்குழு ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்த படியாகத் தமிழகம் இருக்கிறது. இதனால் தமிழகத்தில் ஏற்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான மத்தியக் குழு 3 ஆவது முறையாக நேற்று தமிழகம் வந்தது. அந்த குழுவில் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திர ரத்னு உட்பட 7 பேர் இடம் பெற்றிருந்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை: முதல்வருடன் மத்தியக்குழு ஆலோசனை!

நேற்று காலை செங்கல்பட்டு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்ட இந்த குழு சென்னையில் தங்கி இருந்து பல மருத்துவமனைகள் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளை நேரில் பார்வையிட்டது. அதனைத்தொடர்ந்து 9 மணியிலிருந்து 11.30 மணி வரை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கருடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், மாலை 4 மணிக்கு மீண்டும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக் குழு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் அந்த ஆலோசனையில் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.