‘புதிய கல்விக் கொள்கை’.. ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்களின் கருத்து கேட்கும் மத்திய அரசு!

 

‘புதிய கல்விக் கொள்கை’.. ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்களின் கருத்து கேட்கும் மத்திய அரசு!

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கை, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி முறையில் புதிய மாற்றத்தை உருவாக்கும் என்றும் 34 ஆண்டுகள் பிறகு மாற்றம் செய்யப்படுவதால் பழைய கல்விக் கொள்கைக்கு மாறாக இது அமையும் என மத்திய அரசு தெரிவித்தது. அதே போல, புதிய கல்விக் கொள்கையின் மூலம் 2030க்குள் அனைவருக்கும் கல்வி கிடைக்கும் என்பன உள்ளிட்ட பல மாற்றங்களுக்கு இது வழிவகுக்கிறது. ஆனால் புதிய கல்விக் கொள்கை மும்மொழி கொள்கையை வலியுறுத்துவதால் தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

‘புதிய கல்விக் கொள்கை’.. ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்களின் கருத்து கேட்கும் மத்திய அரசு!

இதற்கு விளக்கம் அளித்த மத்திய அரசு, தாங்கள் இந்தியை திணிக்கவில்லை என்றும் மாணவர்கள் தங்களது 3ஆவது மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தது. இருப்பினும் தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய கல்வி அமைச்சக செயலாளர் அனிதா கார்வால், மாநில பள்ளிக் கல்வித்துறை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளளார்.

அந்த கடிதத்தில், நாளை முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் புதிய கல்விக் கொள்கை குறித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் http://innovativeindia.mygov.in/nep2020 என்ற இணையதளத்தில் கருத்துக்களை பதிவேற்றலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.