பள்ளிகளை எப்போது திறக்க வேண்டும்? கருத்து தெரிவிக்க பெற்றோருக்கு மத்திய அரசு வேண்டுகோள்!

 

பள்ளிகளை எப்போது திறக்க வேண்டும்? கருத்து தெரிவிக்க பெற்றோருக்கு மத்திய அரசு வேண்டுகோள்!

பள்ளிகளை எப்போது திறப்பது என கருத்து தெரிவிக்குமாறு பெற்றோர்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா ஊரடங்கால் கடைசி கல்வியாண்டே இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை மாதம் முடிவு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

பள்ளிகளை எப்போது திறக்க வேண்டும்? கருத்து தெரிவிக்க பெற்றோருக்கு மத்திய அரசு வேண்டுகோள்!

இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை பல பள்ளிகள் ஆன் லைன் மூலம் நடத்தத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என கருத்து தெரிவிக்குமாறு பெற்றோர்களை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் போது கல்வி நிறுவனங்கள் என்ன வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற விவரங்களை திங்கள்கிழமைக்குள் rsamplay.edu@nic.in என்ற மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்புமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.