‘கொரோனாவை 98% துல்லியமாக கண்டறியும்’ ஃபெலுடா பரிசோதனை முறைக்கு ஒப்புதல்!

‘கொரோனாவை 98% துல்லியமாக கண்டறியும்’ ஃபெலுடா பரிசோதனை முறைக்கு ஒப்புதல்!

உலக நாடுகளை உலுக்கி எடுத்து வரும் கொரோனாவை துல்லியமாக கண்டறியும் ஃபெலுடா பரிசோதனை முறைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் சூழலில், இதனை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்று தான் ஃபெலுடா பரிசோதனை முறை. மரபணு திருத்த தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட இந்த பரிசோதனை முறையின் மூலமாக, 98% துல்லியமாக கொரோனா முடிவுகளை தெரிந்து கொள்ள முடியுமாம்.

‘கொரோனாவை 98% துல்லியமாக கண்டறியும்’ ஃபெலுடா பரிசோதனை முறைக்கு ஒப்புதல்!

அண்மையில் இது குறித்து பேசிய மத்திய அமைச்சர், 2000 நோயாளிகளுக்கு இந்த பரிசோதனை செய்யப்பட்டதாகவும் 98% துல்லியமான முடிவுகளை கொடுத்ததாகவும், அறிவியல் மற்றும் தொழிற் ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கிய இந்த பெலுடா பரிசோதனைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

‘கொரோனாவை 98% துல்லியமாக கண்டறியும்’ ஃபெலுடா பரிசோதனை முறைக்கு ஒப்புதல்!

இந்த நிலையில், கொரோனாவை துல்லியமாக கண்டறியும் இந்த பெலுடா பரிசோதனை பல மருத்துவமனைகளில் அமலுக்கு வந்திருக்கிறது. இந்தியாவின் பிரபல துப்பறியும் கதாபாத்திரத்தின் பெயரைக் கொண்டு இதற்கு பெலுடா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.