கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து அறிவித்த மத்திய அரசு !

 

கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து அறிவித்த மத்திய அரசு !

கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமெடுத்து வரும் நிலையில் எப்போது இயல்பு நிலை திரும்பும் என்று தெரியாமல் அரசும் மக்களும் திணறி வருகின்றனர். இதனால் பல நாட்கள் இழுத்தடித்து வந்த பள்ளிப் பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்தனர். அடுத்து கல்லூரிகளுக்கு என்ன செய்யலாம் என தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.

கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து அறிவித்த மத்திய அரசு !

இதையடுத்து, செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க 11 பேர் கொண்டு கல்வி நிபுணர்கள் குழுவை அமைத்துள்ளது. பல்கலைக்கழக துணை வேந்தர்கள் உள்ளிட்டோர் அடங்கிய இந்த குழு விரைவில் இதுகுறித்த அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யலாமா? என்பது குறித்து தெரிவிப்பத்துடன், கல்லூரிகளை எப்போது திறப்பது? வரும் கல்வியாண்டில் எத்தனை நாட்கள் கல்லூரி நடத்துவது? போன்ற முடிவுகளும் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.