வால்வு உள்ள என்95 மாஸ்க் கொரோனாவைத் தடுக்காது! – மத்திய அரசு எச்சரிக்கை

 

வால்வு உள்ள என்95 மாஸ்க் கொரோனாவைத் தடுக்காது! – மத்திய அரசு எச்சரிக்கை

வால்வு உள்ள என்95 மாஸ்க் கொரோனா பரவலைத் தடுக்காது. எனவே அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க மாஸ்க் அணிவது கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளது. எந்த மாஸ்க் அணிய வேண்டும், எப்படிப்பட்ட மாஸ்க்,

வால்வு உள்ள என்95 மாஸ்க் கொரோனாவைத் தடுக்காது! – மத்திய அரசு எச்சரிக்கைஎவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்று எந்த ஒரு வழிகாட்டுதலையும் அரசு வெளியிடவில்லை. இதற்கிடையே சில அறிவுஜீவிகள் தங்கத்தில் மாஸ்க் செய்து பயன்படுத்துகிறேன் என்று காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் வால்வு வைக்கப்பட்ட என்95 மாஸ்கை பயன்படுத்த வேண்டாம்

வால்வு உள்ள என்95 மாஸ்க் கொரோனாவைத் தடுக்காது! – மத்திய அரசு எச்சரிக்கைஎன்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய சுகாதார பணிகள் இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கார்க் அனைத்துத் துறையினருக்கும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சுகாதாரப் பணியாளர்கள் பயன்படுத்தும் என்-95 முகக்கவசங்கள் தவிர்த்து, பொதுமக்களால் அதிகளவில் வால்வுகள் பொருந்திய என்-95 முககவசங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இந்த வால்வுகள் பொருத்திய என்-95 முகக்கவசங்கள் கொரோனா பாதிப்பைத் தடுக்காது.

வால்வு உள்ள என்95 மாஸ்க் கொரோனாவைத் தடுக்காது! – மத்திய அரசு எச்சரிக்கைமாறாக பாதிப்பைத்தான் விளைவுக்கும். என்ன மாதிரியான மாஸ்க் அணிய வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற பொருத்தமற்ற முகக்கவசங்கள் அணிவதைத் தடுக்க மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த சுற்றிக்கை அனைத்து மாநில, யூனியன் பிரதேச சுகாதாரத் துறை செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.