“புதுச்சேரியில் ஆட்சியை கவிழ்க்க நாராயணசாமி செல்போனை ஒட்டு கேட்ட மத்திய அரசு?”

 

“புதுச்சேரியில் ஆட்சியை கவிழ்க்க நாராயணசாமி செல்போனை ஒட்டு கேட்ட மத்திய அரசு?”

இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என ஜனநாயகத்தின் குரலாய் ஒலிக்கும் பிரபலங்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஸ்பைவேர் நிறுவனம் உருவாக்கிய சக்திவாய்ந்த பெகாசஸ் என்ற ஸ்பைவேர் உளவு பார்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

“புதுச்சேரியில் ஆட்சியை கவிழ்க்க நாராயணசாமி செல்போனை ஒட்டு கேட்ட மத்திய அரசு?”

எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் செல்போன் 2019ஆம் ஆண்டு தேர்தல் சமயத்தில் உளவு பார்க்கப்பட்டுள்ளது. அதேபோல தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர், மம்தா மருமகன் அபிஷேக் பானர்ஜி ஆகியோரின் செல்போன்கள் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இந்த ஒட்டு கேட்பினால் யாருக்கு சாதகம் என்ற கேள்வி எழுந்தால், அது மத்திய அரசை நோக்கி கைகாட்டுகிறது. இச்சூழலில் புதுச்சேரி ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பெகாசஸ் ஒட்டு கேட்பு காரணமாக இருக்கலாம் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி புது குண்டை தூக்கி போட்ட்டுள்ளார்.

“புதுச்சேரியில் ஆட்சியை கவிழ்க்க நாராயணசாமி செல்போனை ஒட்டு கேட்ட மத்திய அரசு?”

இதுதொடர்பாகப் பேசியுள்ள அவர், “பிரதமர் மோடி தலைமையிலான அரசு மிகப்பெரிய விலை கொடுத்து, பெகாசஸை வாங்கி நமது நாட்டில் பலரின் மொபைல் போன் பேச்சை ஒட்டு கேட்டுள்ளது. ராகுல் காந்தி, மம்தா உள்ளிட்ட பலரின் மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட தகவல் நாட்டை உலுக்கியுள்ளது. நிலைக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. 6 நாட்கள் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.

இதுகுறித்து பிரதமர் கவலை கொள்ளவில்லை. இதைப் பயன்படுத்தி பல மாநிலங்களில் மத்திய அரசு ஆட்சியைக் கவிழ்த்துள்ளது. புதுவையில் ஆட்சிக் கவிழ்ப்பு சம்பவத்தில் எனது செல்போன் ஒட்டு கேட்கப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுகிறேன். மொபைலில் பேசும்போது எனக்கு சமிக்ஞைகள் தெரிந்தன. வெளிப்படையான விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்” என்றார்.