மத்திய அரசு அறிவிப்புகளை தமிழில் வெளியிட வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு!

மத்திய அரசு அறிவிப்புகளை தமிழில் வெளியிட வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு!

மத்திய அரசின் அறிவிப்புகள் அனைத்தும் ஹிந்தியில் வெளியிடப்பட்டு வருகின்றன. அலுவல் மொழியாக ஆங்கிலம் இருப்பின், ஹிந்தியில் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு தமிழகத்தில் கடும் கண்டனக்குரல்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் கடிதங்களுக்கு ஹிந்தியில் பதில் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

மத்திய அரசு அறிவிப்புகளை தமிழில் வெளியிட வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு!

திமுக எம்.பிக்கள் வில்சன் மற்றும் சு. வெங்கடேசன் ஆகியோர் உள்ஒதுக்கீடு விவகாரம் குறித்து எழுதிய கடிதத்திற்கு, ஹிந்தியில் பதில் கடிதம் வந்ததாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் ஹிந்தியை திணிக்கும் மும்மொழிக் கொள்கை, ஹிந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள் என்ற ஆயுஷ் செயலாளரின் அடாவடி செயல் உள்ளிட்டவை தமிழகத்தில் பெரும் எதிர்ப்பை கிளப்பி வருகின்றன.

மத்திய அரசு அறிவிப்புகளை தமிழில் வெளியிட வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு!

இந்த நிலையில், மத்திய அரசின் அறிவிப்புகளை தமிழில் வெளியிடக்கோரிய வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு அறிவிப்புகளை அந்தந்த மாநில மொழியில் வெளியிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.