’இனி M.Phil படிப்பு கிடையாது’ காரணம் சொல்லும் மத்திய அரசு

 

’இனி M.Phil படிப்பு கிடையாது’ காரணம் சொல்லும் மத்திய அரசு

2017 ஆம் ஆண்டில் இஸ்ரோ வின்வெளி ஆய்வு நிலையத்தின் முன்னாள் தலைவராகப் பணியாற்றிய கஸ்தூரி ரங்கன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது  புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதே அதன் பணி. அதன்படி, 2019, ஜூன் 1-ம் தேதி அக்குழு தனது கல்விக் கொள்கையின் வரைவை சமர்ப்பித்தது.

ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் இத்தேசியக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்டு, அதன் மீதான கருத்துக் கேட்பு கூறும் இறுதி தேதியாக ஜூன் 30 –ம் தேதியை குறித்தது. அதாவது மிக நீண்ட கல்வி வரையறையை ஒரே மாதத்தில் படித்துக் கூற வேண்டும். அதுவும் இந்தியா முழுமைக்கான கல்வி வரையறை இரண்டு மொழிகளில் மட்டுமே இருந்தது. கடும் எதிர்ப்பினால் தேதி நீட்டிக்கப்பட்டது.

’இனி M.Phil படிப்பு கிடையாது’ காரணம் சொல்லும் மத்திய அரசு

மும்மொழிக் கல்வியை வலியுறுத்தியது, ஆரம்ப கல்விக்கான வயதை மூன்றாகக் குறைத்தது உள்ளிட்ட பல்வேறு முரண்பாடுகளை தமிழக கல்வியாளர்கள் பட்டியலிட்டார்கள். நடிகர் சூர்யா இந்தப் புதிய கல்விக் கொள்கை வரையறை மீதான கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

இந்த நிலையில் இன்று, மத்திய அமைச்சரவை தேசியக் கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

’இனி M.Phil படிப்பு கிடையாது’ காரணம் சொல்லும் மத்திய அரசு

புதிய கல்விக் கொள்கை அறிவுறுத்தியுறுக்கும் வகையில் இனி எம்.பில் (M.Phil) படிப்பு கிடையாது என்றும், இன்ஜினியரிங் படிப்பில் ஓராண்டு விடுமுறை எடுத்துக்கொண்டு மீண்டும் படிப்பதைத் தொடரலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் எதிர்த்தத்தில் முக்கியமானது தொழில்கல்வி. ’6-ம் வகுப்பு முதல் தொழில்கல்வி கற்றுத்தரப்படும்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இணைய வழிப் பாடங்கள் அந்தந்த மாநிலங்களின் பிராந்திய மொழியில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளது.