மத்திய பட்ஜெட்…. நிர்மலா சீதாராமன் குறிப்பிட்ட பொருட்களின் மீதான சுங்க வரியை அதிகரிக்க வாய்ப்பு

 

மத்திய பட்ஜெட்…. நிர்மலா சீதாராமன் குறிப்பிட்ட பொருட்களின் மீதான சுங்க வரியை அதிகரிக்க வாய்ப்பு

மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் நோக்கில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில், சில பொருட்களின் மீதான சுங்க வரியை உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் 8வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிட்-19ஆல் அனைத்து துறைகளும் எதிர்மறை விளைவுகளை சந்தித்து உள்ளதால், 2021-22ம் நிதியாண்டு பட்ஜெட்டில் தங்கள் துறைகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் அனைத்து தரப்பினர் உள்ளனர்.

மத்திய பட்ஜெட்…. நிர்மலா சீதாராமன் குறிப்பிட்ட பொருட்களின் மீதான சுங்க வரியை அதிகரிக்க வாய்ப்பு
நிர்மலா சீதாராமன்

இந்த சூழ்நிலையில், மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் சில பொருட்களுக்கான சுங்க வரி மத்திய பட்ஜெட்டில் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பட்ஜெட்டின்போது, பொம்மைகள், பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், காலணிகள், பிரீசர்ஸ், பிரிட்ஜ் கருவிகள், கிரைண்டர்ஸ் மற்றும் மிக்சர்ஸ், ஹெட்போன்ஸ், இயர்போன்ஸ், கலர் டி.வி. மற்றும் சார்ஜர்ஸ் ஆகியவற்றின் மீதான சுங்க வரியை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

மத்திய பட்ஜெட்…. நிர்மலா சீதாராமன் குறிப்பிட்ட பொருட்களின் மீதான சுங்க வரியை அதிகரிக்க வாய்ப்பு
மத்திய பட்ஜெட்

பொருட்களின் மீதான சுங்க வரியை உயர்த்துவதால் எந்த பலனும் இல்லை என்று சர்துல் அமர்சந்த் மங்கல்தாஸ் அண்டு நிறுவனத்தின் ராஜத் போஸ் தெரிவித்தார். மேலும் ராஜத் போஸ் இது குறித்து கூறுகையில், கடந்த 4 முதல் 5 ஆண்டுகளாக மத்திய அரசு குறிப்பிட்ட பொருட்களின் மீதான சுங்க வரியை உயர்த்துவது வாடிக்கையாக உள்ளது. இது போன்ற நடவடிக்கையால் இறக்குமதி குறையாது. மூலப்பொருட்களின் மீதான சுங்க வரியை அவர்கள் தொடர்ந்து அதிகரிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் (மத்திய அரசு) ஆட்டோமொபைல், நுகர்வோர் மின்னனு சாதனங்கள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் போன்ற துறைகளின் பொருட்களின் மீது அவர்கள் கவனம் செல்லக்கூடும் என்று தெரிவித்தார்.