பி.வி.சிந்துக்கு மத்திய அரசு 8 லட்சம் நிதி – எதற்கு தெரியுமா?

 

பி.வி.சிந்துக்கு மத்திய அரசு 8 லட்சம் நிதி – எதற்கு தெரியுமா?

பேட்மின்டன் விளையாட்டு தெரியாதவர்களுக்கு தெரிந்த முகம் பி.வி.சிந்து. பி.வி. சிந்துவின் சாதனைப் பட்டியலைச் சொல்லிக்கொண்டே செல்லலாம். இந்தியாவுக்காக ஏராளமான போட்டிகளில் விளையாடி வெற்றியைத் தேடித் தந்தவர்.

பேட்மின்டன் உலகசாம்பியன் தொடரில் சென்ற ஆண்டு தங்கம் வென்றவர் சிந்து. அதற்கு முந்தைய வருடங்களில் வெள்ளி, வெண்கலம் என பதக்கங்களைக் குவித்து வந்தவர். அதேபோல காமன்வெல்த் போட்டியில் கலப்பு இரட்டையரில் 2018 ஆண்டு தங்கமும், மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளியும் தட்டி வந்தவர்.

பி.வி.சிந்துக்கு மத்திய அரசு 8 லட்சம் நிதி – எதற்கு தெரியுமா?

உச்சபட்சமாக 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர்.

பி.வி. சிந்து ஜனவரி மாதம் பங்கேற்கும் போட்டிகளில் பயிற்சியாளரை வைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பி.வி.சிந்துக்கு மத்திய அரசு 8 லட்சம் நிதி – எதற்கு தெரியுமா?

2016 -ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஒலிம்பிக் குழுவில் (டாப்ஸ்) உள்ளார். இவர் அடுத்தாண்டு ஜனவரி மாதம் தாய்லாந்தில் நடைபெறும் இரண்டு போட்டிகள் மற்றும் ஒரு தகுதிப் போட்டியில் பங்கேற்கிறார். இவர் உடல் தகுதிப் பயிற்சியாளரை வைத்துக் கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தார். இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான தோராய செலவு ரூ.8.25 இலட்சம்.