தமிழகத்துக்கு மத்திய அரசு தடுப்பூசி அனுப்பவில்லை – சுகாதாரத்துறை

 

தமிழகத்துக்கு மத்திய அரசு தடுப்பூசி அனுப்பவில்லை – சுகாதாரத்துறை

தமிழகத்தில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், கையிருப்பில் உள்ள 5 லட்சம் தடுப்பூசிகள் இன்னும் இரண்டு நாட்களில் தீர்ந்துவிடும் என்றும் தமிழகத்துக்கு 12 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு தர வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.

தமிழகத்துக்கு மத்திய அரசு தடுப்பூசி அனுப்பவில்லை – சுகாதாரத்துறை

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப் படுவதாகவும் 6ஆம் தேதிக்கு பிறகே தடுப்பூசி வரும் என்பதால் தடுப்பூசி போடுவதை சில நாட்களுக்கு நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

தமிழகத்துக்கு மத்திய அரசு தடுப்பூசி அனுப்பவில்லை – சுகாதாரத்துறை

இந்த நிலையில், மத்திய அரசு தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு இன்று வரவேண்டிய 1.70 லட்சம் தடுப்பூசிகள் வரவில்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசு இன்று தடுப்பூசிகளை அனுப்பும் என்று நம்பி முகாம்களில் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், தடுப்பூசி வராததால் மக்கள் ஏமாற்றத்தோடு வீடு திரும்பினர். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரிசையில் காத்திருந்த மக்கள், இரண்டு நாட்கள் கழித்து வருமாறு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது. இன்று தரவேண்டிய 1.70 லட்சம் தடுப்பூசிகளை ஓரிரு நாட்கள் கழித்து அனுப்பி வைப்பதாக மத்திய அரசு தெரிவித்திருப்பதாக சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.