Home இந்தியா வெண்டிலேட்டரை ஏற்றுமதி செய்ய முடிவு! மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன தெரியுமா?

வெண்டிலேட்டரை ஏற்றுமதி செய்ய முடிவு! மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன தெரியுமா?

இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடக்கத்தில் கொரோனா நோய்த் தொற்று இந்தியாவில் பரவலாகத் தென்பட்டது. இதனால், அம்மாத இறுதியில் மத்திய அரசு லாக்டெளன் அறிவித்தது. அதனால் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கினர்.

லாக்டெளனால் நோய்த் தொற்று குறையும் அல்லது கட்டுக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, நாள்தோறும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் வெண்டிலேட்டர் மற்றும் சில மருந்து வகைகள் ஏற்றுமதி செய்ய தடை விதித்தது மத்திய அரசு.

நோயிலிருந்து குணம் அடைபவர்கள் சதவிகிதம் அதிகரிப்பதும், இறப்பவர்களின் சதவிகிதம் குறைவதும் ஆறுதல் அளிக்கும் செய்திகள். இதனால் மத்திய அரசு ஒரு முடிவு எடுத்துள்ளது.

கோவிட் – 19  தொடர்பான அமைச்சர்கள் குழு (GOM) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முன்மொழிவை பரிசீலித்து ஒப்புக் கொண்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக மேலும் தேவையான நடவடிக்கைகளுக்காக இந்த முடிவு வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநருக்குத் (DGFT) தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 நோயாளிகளின் இறப்பு விகிதத்தை படிப்படியாகக் குறைத்து வருவதைத் தொடர்ந்தும், அது தற்போது 2.15 சதவீதமாக உள்ளதன் காரணமாகவும், அதாவது குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளே வென்டிலேட்டர்கள் தேவைப்படும் நிலையில் உள்ளதாலும் எடுக்கப்பட்ட முடிவாகும். ஜூலை 31, 2020 நிலவரப்படி, நாடு முழுவதும் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களில் 0.22 சதவீதம் மட்டுமே வென்டிலேட்டர்கள் தேவைப்படும் நிலையில் உள்ளனர். கூடுதலாக, வென்டிலேட்டர்களின் உள்நாட்டு உற்பத்தித் திறனில் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜனவரி 2020 உடன் ஒப்பிடும்போது, ​​வென்டிலேட்டர்களுக்காக தற்போது 20க்கும் மேற்பட்ட உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

கோவிட்-19 யைத் திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கும், உள்நாட்டில் அவை கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும் வென்டிலேட்டர்கள் மீதான ஏற்றுமதி தடை / கட்டுப்பாடு மார்ச் 2020 இல் விதிக்கப்பட்டது. 24.03.2020 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் DGFT அறிவிப்பு எண் 53க்கு ஏற்றுமதி செய்ய அனைத்து வகையான வென்டிலேட்டர்களும் தடை செய்யப்பட்டன. இப்போது வென்டிலேட்டர்களின் ஏற்றுமதி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு வென்டிலேட்டர்கள் வெளிநாடுகளில் இந்திய வென்டிலேட்டர்களுக்கான புதிய சந்தைகளைக் கண்டுபிடிக்கும் நிலை இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

’இரண்டு அணிக்கும் வெற்றி இல்லை’ – கேரளா vs north east united மோதல்

ISL கால்பந்து போட்டிகளின் பரபரப்பு ரசிகர்ளையும் தொற்றிக்கொண்டது. அடுத்த ஆண்டு மார்ச் வரை இந்தக் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் திளைப்பார்கள். நேற்றும் அட்டகாசமான போட்டி நடந்தது. நேற்றைய...

ஏவிஎம் எர்த் மூவர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

ஏவிஎம் எர்த் மூவர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் வரி...

தொடர்ச்சியாக தங்கம் விலை சரிவு: இன்றைய நிலவரம் என்ன?

கடந்த ஆண்டு இறுதி வரையிலேயே சுமார் ரூ.30 ஆயிரத்துக்குள்ளாகவே நீடித்த தங்கம் விலை, பொதுமுடக்க காலத்தில் எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை சந்தித்தது. தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை எட்டி வரலாறு...

ஆம்பூரில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர்

திருப்பத்தூர் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, ஏரிகள் நிரம்பியதால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது.
Do NOT follow this link or you will be banned from the site!